Writer’s Bend – A Screenwriting Concept by Sai Vijendhiran

 Writer’s Bend (n.):

A deliberate or accidental deviation in narrative logic, character behavior, or plot structure where the writer prioritizes emotional, thematic, or symbolic resonance over realism, coherence, or validation.

Origin and Authorship

Writer’s Bend is a screenwriting term and theory created by Sai Vijendhiran, as part of his broader work in screenplay auditing, narrative structure, and storytelling research.

Case Study: விளம்பரம் மட்டுமல்ல... திரைக்கதையும் தான் ராஜா!

நல்ல திரைக்கதை மற்றும் திரை மொழி கொண்ட திரைப்படங்கள் குறைந்த அளவில் விளம்பரங்களோடு வந்தாலும் ஊடகங்களாலும், மக்களாலும் வரவேற்கப்பட்டால் அது மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய சினிமா உலகத்தில், ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக மாற்றுவது நல்ல விளம்பரமா? இல்லையெனில், தரமான உள்ளடக்கமா? இந்த கேஸ் ஸ்டடியில் நாம் மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்ட படங்களும், மிகவும் எளிய அளவில் வெளியான படங்களும் எவ்வாறு வெற்றியும் தோல்வியும் கண்டன என்பதை ஆய்வு செய்கிறோம்.

ஆண்டவரும் மரணமும் - ஆய்வு கட்டுரை

 கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மரணம், மறுஜென்மம், மறுவாழ்வு மற்றும் சாகாவரத்தின் சிந்தனைகள் தொடர்ந்து கமல் ஹாசன் அவர்களின் திரைப்படங்களில் "மரணம்" பற்றி பேசப்படுகிறதே என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அவரை, அவரது ரசிகர்கள் "ஆண்டவர்" என்று அழைக்கிறார்கள் – அது ஒரு பாசப்பெயர். ஆனால் இந்த “ஆண்டவர்” என்ற உச்சியிலே நிற்கும் கலைஞரின் திரைப்பயணத்தில், மரணம் என்பது வெறும் முடிவாக அல்ல, தொடர்ச்சியாக, தாக்கமாக, மாற்றமாக, சில நேரங்களில் புனிதமாகவும் தோன்றுகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

சாந்தி நிலையம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை

 கட்டிலின் மீது படுத்து கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தி. அந்த அறைக்குள் தன் கண்ணை நாலாபக்கமும் சுழல விட்டாள். அலங்கோலமான அறை. ஏதோ போர் ஒத்திகை நடந்தது போன்ற காட்சி. எப்பொழுதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்று தொங்கும் மின்விசிறி. எங்கிருந்தோ வரும் வெளிச்சத்தில் இவை எல்லாம் கொஞ்சமாக தெரிய அதிகமாக இருட்டுடன் இருக்கும் அறை.

சாந்தி முணுமுணுத்தாள் "காதலிப்பது குத்தமா... அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..."

அறையின் வெளியில் குக்கர் விசில் சத்தம் கேட்டது. அம்மாவின் சமையல். சாந்திக்கு மிகவும் பிடிக்கும். ஒரு காதல் தனக்கு பிடித்த எல்லா விஷயங்களையும் தன்னிடம் இருந்து பிடுங்கிக்கொண்டது என்று வருத்தப்பட்டாள் சாந்தி.

நூறாவது கல்யாணம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

கல்யாண மண்டபம் களேபரமாக இருக்கிறது. இன்னும் ஒரு மணிநேரத்தில் முஹூர்த்தம் சம்பந்தமான விஷயங்கள் தொடங்குவதால் மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இருக்கிறார்கள். இளங்கோ எல்லோரையும் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார்.

“யாருயா அங்கே? வாசல்ல கோலம் போட்டாச்சா? விளக்கு ஏத்தியாச்சா? அய்யர் எங்கே? தாலி எங்கே? நீங்க மாப்பிள்ளை வீட பொண்ணு வீடா?” என்று எல்லோரையும் பரபரப்பிற்குள் ஆக்குவது இவர் தான்.

“கல்யாண மண்டபத்தின் வாசலை ஒரு வீடியோ கேமரா படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. இளங்கோ அந்த கேமராமேனிடம் "இங்க பாரு பக்காவா ஒன்னு விடாம சூட் பண்ணிடனும்” என்றார் இளங்கோ.

அதைக்கேட்ட கேமராமேன் செந்தில் ஆம் என்று சொல்வது போல் தலை அசைத்தார்.

விஜயலட்சுமியின் பிரசவம் - சாய் விஜேந்திரனின் சிறுகதை.

 அறுபது வயது, குள்ளமான உருவம், கருப்பான தேகம், புதர் போல் மண்டிக்கிடக்கும் அவரது தாடியில் இருந்து மீசையை பிரித்து எடுத்து அதை பல முறை முறுக்கிக் கொண்டிருந்தார் 'மூக்கையா'. பார்ப்பதற்கு படபடப்பாக காணப்பட்டார். விஜயலட்சுமி கர்ப்பம் என்று தெரிந்த நாள் முதல் ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் மூக்கையா. இரண்டு நாட்களாக விஜயலட்சுமி பிரசவ வலியில், வேதனையில் சத்தம் போடுவது மூக்கைய்யாவின் மனதில் பெரிய பாரம் ஒன்று வைத்தது போல் இருந்தது.

 விஜயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டரை பார்த்ததும் மூக்கையா அவரை நோக்கி ஓடி சென்றார்.

  "விஜயலட்சுமி எப்படி இருக்கு? அவ ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்பிடல. இன்னைக்குள்ள பிரசவம் ஆகிடுமா டாக்டர்? அவ உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? என்று மூக்கையா டாக்டரிடம் கேட்கிறார்.